Høyre கட்சிக்கு உங்களது வாக்கை வழங்குவதற்கான 5 காரணங்கள்

பாராளுமன்றத் தேர்தல் நெருங்குகின்றது! எதிர்வரும் தேர்தலில் Høyre கட்சிக்கு உங்களது வாக்கை ஏன் வழங்க வேண்டும் என்பதற்கு சிறந்த காரணங்கள் இதோ!

Portrettfoto av Erna Solberg som smiler

1. மேலும் பல வேலைத் தளங்களை உருவாக்குதல்.

2018 இல் 56 000 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 2019 இல் 66 000 இற்கும் அதிகமான அளவு தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டன. வேலையின் மதிப்புத்தான் சமூகவள நற்காப்பை உருவாக்குகிறது. Høyre கட்சி வரி அத்தோடு கட்டணங்களுக்கான சுமையைக் குறைப்பதன் மூலம் குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் அதிக பொருளாதார சுதந்திரத்தை வழங்குகிறார்கள். இதனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது நாட்டம் கூடிய ஒரு விடயமாக அமைவதுடன் வேலை செய்வதும் செய்வதும் இலாபம் கூடியதாக அமையும்.

எமது விருப்பம்:

  • அதிகமானவர்களுக்கு வேலை கிடைக்க வைப்பது அத்தோடு அனைவரும் பங்கு கொள்ளக் கூடிய வகையில் வேலைவாய்ப்பு நிலவரத்தை உருவாக்குவது.
  • வேலைத்தளம் சம்பந்தமான குற்றங்களை எதிர்த்து போராடுதல். கீழ்த்தரமான அத்தோடு சட்ட முரணான வகையில் இயங்குபவர்களை நோர்வேயின் வேலைவாய்ப்பு சூழலில் இருந்து அகற்ற வேண்டும்.
  • நிரந்தர வேலைகளே நோர்வேயில் பிரதான விதியாக இருக்க வேண்டும்

எமக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு

Høyre

புதிய நிறுவனங்களை இலகுவாக ஆரம்பிக்கும் வகையில் வரிகளை குறைத்து, விதிமுறைகளை இலகுவாக்கி அத்தோடு அவசியம் அற்ற அதிகாரத்துவத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது Høyre கட்சி இன் குறிக்கோள் ஆகும்.

Opposisjonen

அதிக அளவில் அரச நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் வாணிக வளர்ச்சியை அரசின் கட்டுப்பாட்டிலும் நிர்வாகத்திலும் அதிக அளவில் கொண்டு இருக்க வேண்டும் என இடசாரி கட்சிகள் விரும்புகின்றன.

Høyre

எண்ணெய் மற்றும் எரிவாயு நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு Høyre கட்சி ஆம் என கூறுகிறது.

Opposisjonen

இடதுசாரி கட்சிகள் பல பெட்ரோலிய தொழிற்பாட்டிற்கு ஓர் இறுதி திகதி இட வேண்டும் அல்லது அதை படிப்படியாக அகற்ற வேண்டும் என்கின்றனர்.

வேலை உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே தான் சமூதாயத்தின் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. விலத்தப்படுவது காரணத்தால் இது மேலும் அதிக அளவில் சமூக வேறுபாடுகளை, சமூக ஒருங்கமைப்பில் சவால்களை, சமூக நலன் காப்பு திட்டங்களை பராமரிப்பதில் உள்ள சிக்கல்கள் போன்ற அபாயங்களை அதிகரிக்கின்றது.

– Erna Solberg

2. குறைந்த வரி மற்றும் கட்டணங்கள்

தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான வரி அத்தோடு கட்டணங்களின் பொதுவான அளவை நாம் குறைக்க விரும்புகிறோம். 2013 இல் இருந்து வரிகள் மற்றும் கட்டணங்கள் ஆகியவை 34 பில்லியன்களாக குறைக்கப்பட்டு உள்ளது. சேகரிப்புச் சொத்து பெறுமதியின் வரி நிறுவனங்களின் வரி வருமான வரி ஆகியவற்றை குறைத்து பரம்பரை சொத்தை வழங்கும் பொழுது இருந்த கட்டணத்தையும் நாம் அகற்றி உள்ளோம். அகற்ற

எமது விருப்பம்:

  • குடும்பங்களுக்கும் வேலை நிறுவனங்களுக்கும் ஓர் குறைவான வரி மற்றும் கட்டண அளவு இருக்க வேண்டும் என Høyre கட்சி விரும்புகிறது.

எமக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு

Høyre

மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்குமான வரிகளையும் கட்டணங்களையும் இயன்றவரை குறைவாக வைத்திருக்க Høyre கட்சி விரும்புகிறார்கள்.

Opposisjonen

Arbeiderpartietஉம் இடதுசாரி கட்சிகளும் மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்குமான வரிகளையும் கட்டணங்களையும் அதிகரிக்க விரும்புகிறார்கள்.

பரம்பரை சொத்தை வழங்குவதற்கான கட்டணத்தை மீள் அமுல்படுத்த இடதுசாரி கட்சிகளின் ஒரு பகுதி விரும்புகிறார்கள்.

3. கல்வி

Høyre கட்சி தரமான மற்றும் அறிவாற்றல் கொண்ட பாடசாலைகளை விரும்புகிறார்கள். நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் அல்லது எந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பவற்றின் அர்த்தம் இல்லாது அனைவருக்கும் பாடசாலை நல்ல வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதை நாம் ஏற்படுத்த வேண்டும். ஒரு நல்ல பாடசாலைக்கு சிறந்த ஆசிரியர்கள் அவசியம். ஆசிரியர்களின் தகமையை நாம் கோரிக்கையாக முன்வைப்பதால் நோர்வேஜிய மொழி, கணிதம் அத்தோடு ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தகமை கோரிக்கையை நாம் அமுலாக்கி உள்ளோம். தாம் பணியாற்றும் காலத்தில் மேலும் பல ஆசிரியர்கள் தாம் மேற்கொண்டு கல்வி கற்பதற்கான ஏற்பாட்டை சாத்தியப்படுத்த நாம் விரும்புகிறோம். 2014 இல் இருந்து 40.000 ஆசிரியர்களுக்கு மேற்கல்வி பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்களின் கல்வி அனுமதிக்கான தகமை வேண்டுகோள்களையும் நாங்கள் கடுமையாக்கி உள்ளோம்.

எமது விருப்பம்:

  • அனைத்து ஆசிரியர்களுக்கும் மேற்கல்வி பயிலும் வாய்ப்பை அளிக்க வேண்டும்.
  • உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சமூகமளிக்காத நிலை 27% ஆக குறைந்துள்ளதற்கு காரணமான பாடசாலைக்கு சமூகமளிக்காத விடயத்தின் வரையறை திட்டம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். மாணவர்கள் பாடசாலைக்கு கூடுதலாக சமூகமளித்து கூடிய அளவில் கல்வியை கற்றுக்கொள்கிறார்கள் என கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

எமக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு

Høyre

பாடசாலைக்கு சமூகமளிக்காத விடயத்தின் வரையறை திட்டத்தை Høyre கட்சி தொடர்ந்தும் பேணும்.

Opposisjonen

இடதுசாரி கட்சிகளின் ஒரு பகுதி பாடசாலைக்கு சமூகமளிக்காத விடயத்தின் வரையறை திட்டத்தை அகற்ற விரும்புகிறது.

4. குறைந்த அதிகாரத்துவம்

அதிகாரத்துவம் குறைக்கப்படுவதால் அது சிறந்த பொது சேவைகளை வழங்குகிறது. சோசலிச கட்சிகள் தமது காலத்தில் தொடங்கத் தவறிய பல சீர்திருத்தத் திட்டங்களை Høyre கட்சி தனது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தி உள்ளது. மிகவும் மேம்பட்ட பயன் விளைவுகொண்ட பொதுமக்கள் சேவையை உருவாக்குவதற்கு இச்சீர்திருத்தங்கள் காலப்போக்கில் உதவி அளிக்கும். அவசியம் அற்ற அதிகாரத்தை Høyre கட்சி தொடர்ந்தும் குறைக்கும்.

எமது விருப்பம்:

  • நீங்கள் எங்கு வசித்தாலும் அனைவருக்கும் அரசின் சேவைகள் சிறந்த முறையில் கிடைக்கப்பெற வேண்டும்.
  • நகராட்சி மேம்பாட்டு சீர்திருத்தத் திட்டத்தை தொடருவோம். சேவைகளை சிறப்பாக வழங்கக் கூடிய வகையில் இந்த சீர்திருத்தம் நகராட்சிகளை பலப்படுத்துகிறது.

’பெரிய நகராட்சிகள் வலுவான துறைத்தகமை சூழல்களையும், மேன்மையான பொருளாதாரத்தையும் கொண்டிருப்பதோடு நாளை எதிர்நோக்கக் கூடிய சவால்களை சிறந்த வகையில் சந்தித்துக்கொள்ளும்’’

Nikolai Astrup
உள்ளூராட்சி- அத்தோடு நவீனமயமாக்கல் அமைச்சர்.

5. மருத்துவம்

நோய்வாய்பட்டவர்களுக்கு அவசியமான ஓர் மருத்துவ சேவையை அமைக்க வேண்டும் என Høyre கட்சி விரும்புகிறது. செயல் அமைப்பிற்கு மேலாக நோயாளியிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். நோயாளிகளுக்கு காலதாமதமற்ற சிகிச்சையும் அத்தோடு குறுகிய காத்திருக்கும் காலமும் வேண்டும். நோய்வாய்பட்டவர்களுக்கு அவசியமான ஓர் மருத்துவ சேவையை அமைப்பது அவசியம். வழங்கப்படும் சிகிச்சையின் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் அத்தோடு காத்திருக்கும் காலமும் இயன்ற அளவு குறுகியதாக இருக்க வேண்டும் என்பது எமது விருப்பம். காத்திருக்கும் காலத்தையும் மருத்துவத்திற்கான நோயாளி வரிசையின் நீடிப்பையும் விசேடமாக உடல் மருத்துவம், மனநிலை ஆரோக்கியம் அத்தோடு போதை மருத்துவம் ஆகியவற்றில் நாம் குறைத்து உள்ளோம். போதைக்கு அடிமைத்தனம் கொண்டவர்களுக்கான காத்திருக்கும் காலம் 67 இல் இருந்து 33 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.

எமது விருப்பம்:

  • சுய தெரிவில் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாட்டை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதல் இந்த சிகிச்சை ஏற்பாட்டின் மூலம் அரசின் செலவில் நோயாளி ஓர் அரச அல்லது தனியார் மருத்துவ தளத்தை தானாகவே தெரிவு செய்யும் வாய்ப்பை கொண்டு உள்ளார்.
  • வைத்தியசாலைகளை தொடர்ந்தும் வலுப்படுத்துதல். 2015 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 500 வைத்தியர்கள் ஊடாக வைத்தியசாலைகளை நாம் வலுப்படுத்தி உள்ளோம்.
  • ஐந்து ஆண்டுகளில் நோர்வே வைத்தியசாலைகளில் 95 பில்லியன் குரோனர்கள் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் 20 பில்லியன்கள்.

எமக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு

Høyre

நோயாளி சுய தெரிவில் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாட்டை Høyre கட்சி தொடர்ந்தும் பேணும்.

Opposisjonen

Arbeiderpartiet உம் இடதுசாரி கட்சிகளும் நோயாளி சுய தெரிவில் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாட்டை அகற்ற உள்ளனர்.