குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் கூடுதலாக

குடும்பம் என்பது எமக்கு அரவணைப்பை, ஒற்றுமையை அத்தோடு சொந்த உணர்வை வழங்குகிறது. ஓர் பாதுகாப்பான வளர்ப்பை பெறுவதற்கு பிள்ளைகள் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஒரு பிள்ளையின் வாழ்கையின் ஆரம்பத்தை குடும்பத்தின் வருமானம் தீர்மானிக்கக் கூடாது. குடும்பங்களை ஆதரிப்பதே அரசின் பணி அன்றி அவர்களை கட்டுப்படுத்துவது அல்ல. நல்ல ஓர் குடும்ப அமைப்புப் கொள்கை Høyre கட்சிக்கு முக்கியமானது. அதனால் தான் பிள்ளைகளை கொண்டுள்ள குடும்பங்களுக்கான பொருளாதாரத்தை நாம் மேம்படுத்தி உள்ளோம்

Familie på tre stykker hvor barn sitter på skuldrene til far.

நாம் செய்தவை:

  • ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆண்டிற்கு NOK 3,600 என அரசின் குழந்தை பராமரிப்பு நிதி உதவி (barnetrygd) அதிகரிக்கப்பட்டது. இது மாதம் ஒன்றுக்கு NOK 300 ஆகும். இந்த மாற்றம் 01 செப்டம்பர் 2021 இல் இருந்து செல்லுபடி ஆகும். இடதுசாரி கட்சிகள் ஆட்சியில் இருந்த காலத்தில் அரசின் குழந்தை பராமரிப்பு நிதி உதவி எத்தருணத்திலும் உயர்த்தப்பட இல்லை.
  • சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு செல்லாத பிள்ளைகளுக்கு என வழங்கப்படும் அரச நிதி உதவி (kontantstøtten) மாதம் ஒன்றுக்கு குரோனர் 7500 ஆக அதிகரிக்கப்பட்டது .
  • மகப்பேறின் போது வழங்கப்படும் ஒரு தடவை நிதி உதவி குரோனர் 84.720 இல் இருந்து குரோனர் 90.300 ஆக அதிகரிக்கப்பட்டது .
  • 6 – 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு ஓய்வு நேர கூப்பன் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த அட்டையில் அரை வருடங்களுக்கு 1000 குரோனர்கள் உண்டு.
  • வன்முறை மற்றும் பலாத்காரம் போன்றவற்றிற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டது. 2021 இல் இதற்கான ஒட்டுமொத்த செலவு 1.1 பில்லியன் குரோனர்கள் ஆகும்.

Høyre கட்சியை பொறுத்தவரை எமது பிள்ளைகளே நாம் கொண்டு உள்ள முக்கியமான பொறுப்பு ஆகும். அவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்தாலும், பாடசாலையில் இருந்தாலும், இண்டர்நெட்டில் இருந்தாலும் அல்லது அவர்கள் வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கு ஓர் பாதுகாப்பான அத்தோடு நல்ல ஓர் வளர்ப்பை பெறுவதற்கு தகுதி கொண்டவர்கள். நல்ல ஓர் சமூகத்தை அனைவருக்கும் உருவாக்குவதற்கு பாதுகாப்பான மற்றும் நல்ல வளர்ப்பிற்கான உரிமையை பிள்ளைகள் கொண்டிருப்பது அத்தியாவசியமானது.

’’தமது பெற்றோர்கள் மற்றவர்களை விட குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்ற காரணத்தால் எந்த ஒரு குழந்தைக்கும் வாய்ப்புக்கள் குறைவாக இருக்கக் கூடாது.”

Kristin Ørmen Johnsen
குடும்ப- மற்றும் கலாச்சாரக் குழுவின் பாராளுமன்றத் தலைவர்

எமக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு

Høyre

ஒவ்வொரு குடும்பமும் தமது வாழ்க்கையை சுயமாகவே ஒழுங்கமைத்துக் கொள்ள வாய்ப்பளிக்க Høyre கட்சி விரும்புகிறது.

Opposisjonen

ஒரு குடும்பம் தாமாகவே தமது தெரிவுகளை எடுக்கும் வாய்ப்புக்கான உரிமையை இடதுசாரி கட்சிகள் மட்டுப்படுத்துகின்றன. எல்லா விடயங்களிலும் அரசின் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அத்தோடு எமது வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்ற விடயத்தில் அரசு தலையீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் விரும்புகிறார்கள்.