Høyre கட்சி வரி மற்றும் கட்டணங்களைக் குறைக்கும்

கடந்த 7 ஆண்டுகளில், Høyre கட்சி NOK 34 பில்லியன்களை வரி மற்றும் கட்டணங்களில் குறைத்துள்ளனர்.
நோர்வே நாட்டில் வருமானத்தை அதிகமாகக் கொண்டு உள்ளவர்கள் வரியையும் அதிக அளவில் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் ஓர் நன்கு இயங்கும் மற்றும் விகித ரீதியான வரி செலுத்தல் ஏற்பாட்டை கொண்டு உள்ளது.

Torbjørn røe isaksen portrett

ஆக்கபூர்வமான மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்து வேலை ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலான ஓர் வரி- அத்தோடு கட்டண அமைப்பு முறையை Høyre கட்சி அமைக்கும். அதே நேரத்தில், வரி செலுத்தும் திறனை கொண்டு உள்ள அனைவரும் வரி செலுத்த வேண்டும். ஓர் சமூகநல ஏற்பாட்டிற்கான செலவை தாங்குவதற்கு வரி வருமானங்கள் முக்கியமானது. ஓர் பயன் விளைவுள்ள மற்றும் சிறந்த முறையில் இயங்கும் பொது நிர்வாகம் அத்தோடு ஓர் நல்ல அடிப்படை வசதிகளின் உள் கட்டமைப்பு ஆகியவை சமூதாயத்திற்கும் நோர்வே நாட்டின் பொருளாதாரத்திற்கும் முக்கியம், மற்றும் நோர்வே வணிக மற்றும் தொழில்துறைக்கு ஒரு போட்டியிடும் அனுகூலத்தை வழங்குகிறது. இதற்காகத் தான் நாம் தொடர்ந்தும் தொழில் நிறுவனங்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களுக்குமான விதிமுறைகள் மற்றும் அறிவிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை எளிதாக்குவோம்.

இதுவரை நாம் எவற்றை செய்தோம்:

  1. பரம்பரை சொத்தை வழங்கும் பொழுது இருந்த கட்டணத்தையும் நாம் அகற்றி உள்ளோம். பெற்றோரிடம் இருந்து நீங்கள் சொத்தாக பெற்றுக்கொள்ளும் வதிவிடம் அல்லது வேறு எவற்றுக்கும் இனிமேல் அதிக வரிக்கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
  2. தனிநபர்வரி 28% இருந்து 22% இற்கு குறைக்கப்பட்டு உள்ளது.
  3. தொழில்நிறுவன வரி 28% இருந்து 22% இற்கு குறைக்கப்பட்டு உள்ளது.
  4. குறைக்கப்பட்ட சேமிப்பு செல்வ வரி, குறிப்பாக வேலை நிறுவனங்கள் மற்றும் வேலை தளங்களுக்கு
  5. NRK இன் உரிமக் கட்டணம் நீக்கப்பட்டது.

எமக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு

Høyre

Høyre கட்சி மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வரிகளையும் கட்டணங்களையும் முடிந்தவரை குறைவாக வைத்திருக்க விரும்புகிறது.

Opposisjonen

Arbeiderpartiet உம் இடதுசாரி கட்சிகளும் மக்கள் மற்றும் வணிகங்களுக்கான வரிகளையும் கட்டணங்களையும் அதிகரிக்கும்.

Høyre

எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களை தொடர்வதற்கு Høyre கட்சி சம்மதிக்கிறது.

Opposisjonen

இடதுசாரி கட்சிகளின் ஒரு பகுதி பரம்பரை சொத்தை வழங்கும் பொழுது இருந்த கட்டணத்தை மீண்டும் அமுல்படுத்தும்.

இடதுசாரி கட்சிகளில் பல பெட்ரோலியத் துறையின் இயக்கத்தை படிப்படியாக ஆக்க வேண்டும் அல்லது ஓர் இறுதி திகதியை குறிக்க வேண்டும் என்கின்றனர்.

அதிக அளவு வரி, பாரிய அளவிலான விதிமுறைகள் முன் கணிக்க முடியாத கட்டமைப்பு நிபந்தனைகள் மற்றும் பொருத்தமான தகமையின் பற்றாக்குறை ஆகியவை வளர்ச்சிக்கும் அத்தோடு பெறுமதி உருவாக்கத்திற்கும் பாரிய தடைகளாக அமையும். அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நாங்கள் வசதி செய்ய வேண்டும் என்றால் வேலை நிறுவனங்கள் இப்பொழுது அனுபவித்து வரும் தடங்கள்களை பற்றி நாம் ஏதாவது செய்ய வேண்டும். புதிய வியாபார நிறுவனங்களை ஆரம்பித்துக்கொள்வதை Høyre கட்சி இலகுவாக்கும்.

Høyre கட்சியின் குறிக்கோள் என்ன? அறிவுக்கு முன்னிடம் அளிப்பதன் மூலமும், எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதன் மூலமும், உலகிலேயே சிறந்த பாடசாலையை கொண்டிருப்பதன் மூலமும் நோர்வே நாட்டின் வேலை தளங்களை பேணிப் பாதுகாப்பதே எமது குறிக்கோள். தமது திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு பிள்ளைகள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தில் Høyre கட்சி சேர்ந்து இருக்கும் பொழுது மருத்துவ வரிசைகள் குறைகிறது அத்தோடு மருத்துவ- மற்றும் பராமரிப்பு சேவைகளின் தரத்தில் கவனம் செலுத்துவதை ஆர்வமாகக் கொண்டு உள்ளது. அத்தோடு நாம் எமது பாதுகாப்பு திறனை புதுப்பிப்பதோடு பலப்படுத்திக்கொண்டு மற்றும் நெருக்கடிகள் அத்தோடு பயங்கரவாதத்திற்கு எதிரான தயார் நிலையை பலப்படுத்துகிறோம்.

Høyre கட்சி பற்றி இங்கே மேலும் படிக்கவும் (https://hoyre.no/partiet/om-hoyre/)