தமிழ்

Høyre கட்சிக்கு உங்களது வாக்கை வழங்குவதற்கான 5 காரணங்கள்

பாராளுமன்றத் தேர்தல் நெருங்குகின்றது! எதிர்வரும் தேர்தலில் Høyre கட்சிக்கு உங்களது வாக்கை ஏன் வழங்க வேண்டும் என்பதற்கு சிறந்த காரணங்கள் இதோ!

Høyre கட்சி வரி மற்றும் கட்டணங்களைக் குறைக்கும்

கடந்த 7 ஆண்டுகளில், Høyre கட்சி NOK 34 பில்லியன்களை வரி மற்றும் கட்டணங்களில் குறைத்துள்ளனர்.
நோர்வே நாட்டில் வருமானத்தை அதிகமாகக் கொண்டு உள்ளவர்கள் வரியையும் அதிக அளவில் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் ஓர் நன்கு இயங்கும் மற்றும் விகித ரீதியான வரி செலுத்தல் ஏற்பாட்டை கொண்டு உள்ளது.

குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் கூடுதலாக

குடும்பம் என்பது எமக்கு அரவணைப்பை, ஒற்றுமையை அத்தோடு சொந்த உணர்வை வழங்குகிறது. ஓர் பாதுகாப்பான வளர்ப்பை பெறுவதற்கு பிள்ளைகள் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஒரு பிள்ளையின் வாழ்கையின் ஆரம்பத்தை குடும்பத்தின் வருமானம் தீர்மானிக்கக் கூடாது. குடும்பங்களை ஆதரிப்பதே அரசின் பணி அன்றி அவர்களை கட்டுப்படுத்துவது அல்ல. நல்ல ஓர் குடும்ப அமைப்புப் கொள்கை Høyre கட்சிக்கு முக்கியமானது. அதனால் தான் பிள்ளைகளை கொண்டுள்ள குடும்பங்களுக்கான பொருளாதாரத்தை நாம் மேம்படுத்தி உள்ளோம்